fbpx

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…! மீறி திறந்தால் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி இன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதிலாக இன்று மிலாது நபி விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் இன்று முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . மேற்படி நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Tasmac Shops) உள்ள FL1. FL2, FL3, மற்றும் FL3A, FL4A ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

A holiday has been announced for Tasmac shops across Tamil Nadu today.

Vignesh

Next Post

பழைய மற்றும் அரிய நோட்டுகள், நாணயங்கள்!. லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம்!. ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி?

Tue Sep 17 , 2024
Old 5 Rupees note value: How to sell old currency online

You May Like