டெல்லி மாநகர பகுதியில் யோகேஷ் குமார் தனது மனைவி அர்ச்சனாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஹார் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் யோகேஷ் குமார் தன்னுடைய மனைவியைக் கொலை செய்துவிட்டேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது அவரின் மனைவி அர்ச்சனா மூச்சின்றி தரையில் விழுந்த கிடப்பதை காவல்துறையினர் பார்த்தனர்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, பரிசோதனையில் அவர் ஏற்கெனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அத்துடன் யோகேஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் முதல்கட்ட விசாரணையில், குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக மனைவி பலரிடம் இருந்து பணத் தொகையை கடன் வாங்கியுள்ளார்.
இதனை பற்றி இருவரும் இடையே ஞாயிற்றுக்கிழமை அன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் யோகேஷ் அர்ச்சனாவை கழுத்தை நெரித்துள்ளார். அதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.