fbpx

இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் டிசம்பர் 11, 12ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வரும் 11ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 12ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : திருவண்ணாமலை கார்த்திகை தீபம்..!! நேரில் தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் விமோசனம் கிடைக்கும்..!!

English Summary

The Chennai Meteorological Department has announced that there is a possibility of heavy rain in Tamil Nadu on December 11th and 12th.

Chella

Next Post

ரூ.6000.. பி.எம் கிசான் திட்டத்தில் போலி பயனாளிகளை அடையாளம் காண தணிக்கை...! மத்திய அரசு அதிரடி

Sat Dec 7 , 2024
Audit to identify ineligible beneficiaries under PM Kisan scheme

You May Like