தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் ஒரு சில முக்கிய திட்டங்களை அரசு தடை செய்வதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
அந்த வகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் இம்மாதம் 20ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது .
செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக ஆரம்பமாக இருக்கிறது.
இவர்களிடையே சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாக தொடங்கியது. இந்த நிலையில், விண்ணப்ப பதிவின்போது விரல் ரேகையை பதிவு செய்ய கருவிகள் பயன்படுத்தப்பட இருப்பதால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.