fbpx

காஞ்சிபுரத்தில் கொடூரம்: போதையிலிருந்த அண்ணனை கட்டையால் அடித்து மட்டையாக்கிய தம்பி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை தம்பியே கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள திம்மையன்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் வடிவேலு. இவரது அண்ணன் சரவணன். திருமணமான சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாலாஜாபாத் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று குடித்துவிட்டு மது போதையில் தம்பி வடிவேலு வீட்டிற்கு சென்று இருக்கிறார் சரவணன்.

குடிபோதையில் நிதானமில்லாமல் இருந்த சரவணன் தம்பி வடிவேலுவுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். வாக்குவாதம் தீவிரமாக முற்றிய கைகலப்பாக மாறியுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் சரவணன் தம்பி வடிவேலுவின் கையை கடித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த வடிவேலு அருகில் கிடந்த கட்டையை எடுத்து சரவணனை சராமாறியாக தாக்கியுள்ளார். இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் விழுந்த சரவணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து உடனே வந்த காவல்துறையினர் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் அண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்த வடிவேலுவை கைது செய்து இது கொலை வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது. குடிபோதையால் ஏற்பட்ட தகராறில் தம்பியே சொந்த அண்ணனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

பாய்ந்து வந்த பன்றி.......! பதறிய சிறுவன்.......! போராடிய மக்கள்! பதற வைக்கும் காட்சிகள்!

Tue Mar 14 , 2023
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவனை பன்றி ஒன்று கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கொண்ட மாவட்டத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது தெருவிற்குள் திடீரென நுழைந்த பன்றி ஒன்று சிறுவனை நோக்கி ஓடிவந்து அவனை கீழே தள்ளி கடித்து குதற ஆரம்பித்தது. இதனால் அந்த சிறுவன் வலியால் துடித்தான். அருகிலிருந்த […]

You May Like