ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த காதல் மன்னன் டாக்டர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ரமேஷ் சுவைன் என்ற பீப்பு பிரகாஷ். 60 வயதான இந்த நபர் தன்னை ஒரு மருத்துவர் எனக்கூறி இதுவரை 18 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த பெண்களிடமிருந்து அவர் பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதும் காவல்துறையின் விசாரணையில் நிரூபணமாகி இருக்கிறது. சினிமாக்களில் வரும் சம்பவங்களைப் போல் நடந்துள்ள இந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இவரது மனைவிகளில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் பிடிப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தியாவின் 10 மாநிலங்களைச் சார்ந்த 18 பெண்களை இவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தன்னை ஒரு மருத்துவராக காட்டிக் கொண்டு இவர் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மோசடியும் செய்து இருக்கிறார். இந்த மோசடி சம்பந்தமான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இவரது வழக்கில் தற்போது பல உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றன.
You May Like
-
2023-11-02, 8:07 am
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா காலமானார்…!
-
2023-04-11, 1:19 pm
தொடங்கியது முதல் திரைப்பட போட்டோ ஷூட்….! இயக்குனரானார் பிக்பாஸ் அமீர்….!
-
2022-10-15, 5:39 pm
SBI கிரெடிட் கார்ட் வைத்து இருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!!