சிவகங்கை மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தந்தையின் காதலியை மகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சார்ந்தவர் பரமேஸ்வரி வயது 40. இவருக்கும் கம்பர் தெருவை சார்ந்த நரசிம்மன் என்பவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக நரசிம்மன் அடிக்கடி பரமேஸ்வரி வீட்டுக்கு வந்து இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக நரசிம்மனின் மகன் ஆனந்த் குமார் பலமுறை கண்டித்திருக்கிறான். பரமேஸ்வரி உடனான பழக்கத்தை கைவிடக் கோரி பலமுறை எச்சரித்தும் நரசிம்மன் விடுவதாக இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அம்மிக் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பரமேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி தப்பியோடிய ஆனந்த் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.