fbpx

எமனான ஷேர் மார்க்கெட் விபரீத முடிவு எடுத்த இளைஞர்! மதுரையில் பரிதாபம்!

மதுரையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடனால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமாக அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை அவனியாபுரத்தைச் சார்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞர் கோவையைச் சார்ந்த பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரது பங்குகள் முழுவதுமாக சரிந்ததால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து முழு பணத்தையும் இழந்திருக்கிறார் ஜெகதீஷ். கடன் கொடுத்த நபரும் அடிக்கடி போன் செய்து கடனை கேட்டு வந்திருக்கிறார் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

பிரகாஷ் தினமும் ஜெகதீஷை சந்தித்து காசை திருப்பி கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். மேலும் இது தொடர்பாக பண மோசடி புகார் ஒன்றை ஜெகன் மீது பதிவு செய்திருக்கிறார் பிரகாஷ். இது போன்ற செயல்களால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார் பிரகாஷ். இதனைத் தொடர்ந்து நேற்று வீட்டில் ஆளில்லாத சமயம் பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றிய பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடமும் அவருக்கு கடன் கொடுத்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Rupa

Next Post

ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கும் 3,000 பள்ளிகள்.. கடும் ஆசிரியர் பற்றாக்குறை... அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Sun Apr 2 , 2023
அசாம் மாநிலத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. ஏறக்குறைய 3,000 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அசாம் சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அம்மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் பேசிய அவர் 12,731 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.. போதிய உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் பல […]

You May Like