fbpx

மனைவி, 7 மாத குழந்தை உட்பட 3 பேர் கொடூர கொலை.! கணவன் தற்கொலை.! காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது.

உபி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் ராம் இவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலை பரிசோதனை செய்தபோது அதிலிருந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் கிடைத்தது.

இந்த கடிதத்தில் தனது மனைவி 7 வயது மகன் மற்றும் 7 மாத குழந்தையை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருக்கிறார். மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தையும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதனை காவல்துறையினர் வெளியிட மறுத்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் புதைக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. கணவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஆளுநர் ரவி, அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்வில் 10 லட்ச ரூபாய் திருட்டு.! காவல்துறையிடம் புகார் அளித்த பாரதிய ஜனதா மாநிலச் செயலாளர்.!

Mon Dec 11 , 2023
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் இல்ல திருமண விழாவில் 10 லட்ச ரூபாய் திருடு போன சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திருமண விழாவில் பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் […]

You May Like