fbpx

கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றி மனைவி உல்லாசம்! ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்!

தாம்பரம் அருகே தன் மனைவி ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதை கண்ட கணவர் பைக்கை தள்ளிவிட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த சிவா(30) மற்றும் பூமாதேவி (26) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதிக்கு எட்டு வயதில் மகளும் ஐந்து வயதில் மகனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் படப்பையை அடுத்த ஓரத்தூரை சார்ந்த சுந்தர் என்பவருக்கும் பூமாதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இது தொடர்பாக சிவா மட்டும் பூமாதேவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பெரிய சண்டையில் முடியவே கடந்த மூன்று மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் பூமாதேவி தனது கள்ளக்காதலுடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறார் சிவா. இதனைத் தொடர்ந்து நேற்று பூமாதேவியும் சுந்தரும் ஒன்றாக பைக்கில் செல்வதை கண்ட சிவா அவர்களை பின்தொடர்ந்து சென்று மனைவியை கீழே தள்ளியிருக்கிறார். இதில் நிலை தடுமாறி விழுந்த பூமாதேவிக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. உடனே அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரது பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் தனது மனைவியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த சிவாவை கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

Rupa

Next Post

முக்கியச் செய்தி: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி!

Wed Mar 29 , 2023
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்பாபு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சரத் பாபு. தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், […]

You May Like