உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மதம் மாறவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டிய இஸ்லாமிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த அலி கான் என்பவர் அப்பகுதியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவியை அமான் என்ற பெயரில் காதலித்து வந்திருக்கிறார். அந்த மாணவியுடன் நெருங்கி பழக ஆரம்பித்த அலி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை காதலிக்க வைத்திருக்கிறார். பின்னர் அவரை கௌதம புத்த நகருக்கு அழைத்துச் சென்று மாணவியை மயக்கமடைய செய்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறார். அதனை தனது செல்போனிலும் படம் பிடித்து மாணவியை தொடர்ந்து மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் அந்த மாணவி மிகவும் அச்சத்தில் இருந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஒரு நாள் பள்ளி சென்று கொண்டிருந்த மாணவியை ஜனவரி 23ஆம் தேதி கடத்திச் சென்ற இளைஞர் மீண்டும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தனது பெற்றோரிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் தங்களது குடும்பப் பெயர் பாதிக்கும் என அஞ்சிய பெற்றோர் வெளியே சொல்லாமல் இருந்திருக்கின்றனர். இவ்வேளையில் அந்த இளைஞரின் மிரட்டல் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. மேலும் ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் நீ மதம் மாறவில்லை என்றால் சாரதா வாக்கரை கொலை செய்தது போல உன்னையும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் பதறிய மாணவி இந்த விஷயத்தை அவரது பெற்றோரிடம் சொல்ல அவர்கள் உடனடியாக கத் முக்தீஸ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி அலி கானை கைது செய்துள்ளனர் இந்த வழக்கில் ஏஎஸ்பி முகேஷ் சந்திர மிஸ்ரா விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளார் . மேலும் இந்த இளைஞரின் மீது ஒரு இளம் பெண்ணை சாதிய ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்த வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பிலிருந்து கூறப்படுகிறது . கடந்த மே மாதம் இதே போன்ற ஒரு சம்பவம் கொலையில் முடிந்தது நமக்கு நினைவு இருக்கலாம். சாரதா வாக்கர் என்பவர் தனது காதலரான அஃப்தாப் அமீன் என்பவர் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அந்த இளைஞர் தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்தது நமக்கு நினைவிருக்கலாம். இந்த சம்பவம் கடந்த வருடம் மே மாதம் நடைபெற்றது. ஆனால் இது நவம்பர் 18ஆம் தேதி தான் உலகத்திற்கு தெரிந்தது . இந்த சம்பவத்தை முன்னுதாரணமாக காட்டித்தான் அலி கான் அந்த சிறுமியை மிரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நபர்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உத்திரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.