fbpx

“நண்பர்களுடன் பந்தயம்..” இளம்பெண்ணின் பிட்டத்தில் அடித்த இளைஞர்.! கைது செய்த போலீசார்.!

நண்பர்களுடன் வைத்த பந்தயம் காரணமாக ஒரு பெண்ணை பிட்டத்தில் அடித்ததற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது. நண்பர்களுடைய தூண்டுதலின் பெயராலேயே இதனைச் செய்ததாக அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, இரவு 7.30 மணி அளவில், பெங்களூரின் விஜயநகர் பகுதியில் உள்ள நம்மூதா ஹோட்டலில் சாந்தன் உட்பட இரு நண்பர்களும் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பெண்களை அநாகரிகமாக தொடுவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த தினத்தன்று பில் கவுண்டரில் நின்றிருந்த ஒரு பெண்ணை சாந்தன் பிட்டத்தில் அடித்ததாக தெரிகிறது. நண்பர்களுடன் பந்தயம் செய்து இத்தகைய செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் அந்த பெண்ணிடம் செய்த இந்த அருவருக்கத்தக்க செயலை மற்ற இரு நண்பர்களும் தூரத்தில் இருந்து ரசித்து, சிரித்துக் கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், சாந்தனை கடுமையாக ஆட்சேபித்து கேள்விகள் கேட்க, சுற்றி இருந்த அனைவரும் அந்த பெண்ணிற்கு சாதகமாக சாந்தனைத் திட்டி உள்ளனர். தான் ஒரு நிரபராதி என்றும் தனக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கூறி சமாளித்து அந்த இடத்தை விட்டு நண்பர்களுடன் வெளியேறிவிட்டார். இந்த சம்பவத்தை சிசிடிவி பார்த்த ஹோட்டலின் ஊழியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து ஜனவரி 10ஆம் தேதி விஜயநகர் போலீசார், சாந்தன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர் கேஸ் டெலிவரி செய்யும் ஊழியராக இருப்பது தெரியவந்துள்ளது. தன் நண்பர்களிடம் விட்ட சவால் காரணமாகவே தான் இதைச் செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இரு குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.

Next Post

பட்ஜெட் 2024 | "அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய சம்பவம் இருக்கு"..!! நிர்மலா சீதாராமன் அதிரடி..!!

Thu Feb 1 , 2024
2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு பேசிய அவர், “நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக […]

You May Like