Thailand: பாங்காக்கில் நபர் ஒருவர், சுய இன்பத்தில் உச்சகட்டம் அடைவதற்காக காளைகளுக்கு பயன்படுத்தப்படும் பாலியல் தூண்டுதலுக்கான ரிங்கை ஆண்குறியில் போட்டுக்கொண்டதால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கை சேர்ந்த நபர் ஒருவர், மார்ச் 13 ம் தேதி தனது வீட்டில் பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் முயற்சியாக ஹார்டுவேர் கடையில் இருந்து பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது. உச்சகட்ட இன்பதை அடைய இவர் 9 மெட்டல் பேண்டுகளைப் பயன்படுத்தி தனது விதைப்பையை சுருக்கியுள்ளதாகவும், இதனால் ஆணுறுப்பும் வீக்கமடைந்து வலி தாங்கமுடியாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, பாலியல் இன்பத்திற்காக அந்த நபர், ஆண் உறுப்பில் 11 வளையங்களை பொருத்தியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து, அதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
காளைகளை இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்தப்படும் பாலியல் தூண்டுதலை இந்த நபர், உடலுறவு கொள்ள எடுத்து கொண்டதால் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகையான மோதிரங்கள் ஆபத்தானவை எனவும், சிறிது நேரம் வேண்டுமானால் ப்ரியாபிஸம் ஏற்படலாம், ஆணுறுப்பு எந்த தூண்டுதலும் இல்லாமல் ஒரு நிலையான விறைப்பு நிலையில் இருப்பதால் ஆண்குறி ஒரு கடினமான விறைப்புத்தன்மையை அடைந்து விடுகிறது. இந்த நிலை ஆண்குறி குடலிறக்கம் உட்பட நிரந்தர சேதத்தை விளைவித்துவிடும். இது சில நேரங்களில் ஆணுறுப்பை துண்டிக்கப்பதற்கு கூட வழிவகுத்துவிடும் என்று மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
Readmore: ”என்னைப் பார்த்து அப்படி நினைக்காதீங்க”..!! பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!