fbpx

இபிஎஸ் தரப்புக்கு புதிய சிக்கல்.. ஓபிஎஸ் அணி எடுத்த அதிரடி முடிவு… அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது..

இதனிடையே , அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் கோரியும், இரட்டை இலை சின்னம் கோரியும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோதல் வேட்பாளரை பொதுக் குழு மூலம் தேர்வு செய்ய வேண்டும். பொதுக் குழுவை உடனே கூட்ட முடியாவிட்டால், உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதன்மூலம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த முடிவை அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இருவருமே ஏற்றுக்கொண்டனா். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோதலில் அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு ஆதரவு தெரிவித்து பொதுக் குழு உறுப்பினா்கள் இன்று (பிப். 5) இரவுக்குள் கடிதம் அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் நேற்று அறிவித்திருந்தார். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒற்றுமையாக சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவளிப்போம் என்று ஓபிஎஸ் அறிவித்தார்..

அதிமுக பொதுக்குழு..! ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..! ஓபிஎஸ் அறிவிப்பு

இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது போலவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செலம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோருக்கும் படிவங்கள் அனுப்பப்பட்டது.. அந்த படிவத்தில் “எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்மொழிந்துள்ள அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை இன்று மாலை 7 மணிக்குள் அளிக்க வேண்டும்.. தென்னரசுவை ஆதரிக்க சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் எனவும், இல்லையெனில், மாற்று வேட்பாளர் பெயரை வாக்குச் சீட்டில் குறிப்பிட வேண்டும்..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

இந்த ஆலோசனையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய படிவத்தை புறக்கணிக்க ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது.. இபிஎஸ் அணி அறிவித்த வேட்பாளரான தென்னரசு பெயர் மட்டுமே அந்த படிவத்தில் இருக்கிறது.. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக கூறி, மீண்டும் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது..

அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், நடுநிலையாக இல்லாமல், சிலரின் கைப்பாவையாக மாறி அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானது என்றும் ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டி உள்ளது.. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும் ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.. ஆனால் வேட்பாளரை தேர்வு செய்வதிலேயே இழுபறி நீடிப்பதால் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது..

Maha

Next Post

அடிதூள்...! இந்த 232 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு அதிரடி முடிவு...! முழு விவரம் இதோ....

Mon Feb 6 , 2023
சீன இணைப்புகளுடன் கூடிய 138 ஆன்லைன் சூதாட்ட செயலி, 94 லோன் செயலியை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 138 பந்தய பயன்பாடுகள் மற்றும் 94 கடன் வழங்கும் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொருள்” இருப்பதால், இந்த செயலிகள் ஐடி சட்டத்தின் பிரிவு 69 கீழ் நடவடிக்கை […]

You May Like