fbpx

கள்ளக்குறிச்சியில் 4 பேர் இறந்த விவகாரம்!! சாராய வியாபாரி கைது!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சிலர் கும்பலாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்கள். இதில் 6 பேர் உடல்நிலை பாதிப்புக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவலை மறுத்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில், சாராய வியாபாரி கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 25க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலை கவலைக் கிடமாக இருக்கிறது.

Read more ; JOB |ஒரு டிகிரி இருந்தா போதும்..!! கை நிறைய சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!! உடனே அப்ளே பண்ணுங்க!!

English Summary

A person has been arrested in connection with the death of 4 people after drinking liquor in Kallakurichi Karunapuram area.

Next Post

இந்தியாவின் ஆன்டிபயாடிக் மருந்துக்கு தடை..!! கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் நடவடிக்கை..!!

Wed Jun 19 , 2024
Nepal's Drug Control Department has banned the sale and distribution of the injectable antibiotic Biodox, citing severe side effects.

You May Like