இத்தாலியில் 36 வயதான ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, மற்றும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு உறுதியானது..
ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷனில் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.. அதில் இடம்பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அந்த அறிக்கையில், 36 வயதான ஒரு நபருக்கு ஒரே நேரத்தில், கொரோனா, குரங்கு அம்மை, ஹெச்.ஐ.வி பாதிப்பு உறுதியானதாக கூறப்பட்டுள்ளது.. மேலும் அந்த நபருக்கு காய்ச்சல், தொண்டை புண், சோர்வு மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. முதல் அறிகுறிகளை அனுபவித்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.. நோயாளியின் இடது கையில் சொறி போன்ற கொப்புளங்கள் உருவானதை தொடர்ந்து, “நோயாளியின் உடல், கீழ் மூட்டுகள், முகம் ஆகியவற்றில் கொப்புளங்கள் ஏற்பட்டன..
நோயாளி காடானியாவில் உள்ள சான் மார்கோ பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு ஹெச்.ஐ.வி மற்றும் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. குரங்கு அம்மை மற்றும் கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு அந்த நபர் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து பேசிய போது “ குரங்கு அம்மை மற்றும் கொரோனா அறிகுறிகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று சேரக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இணை-தொற்று, மற்றும் பாலியல் பழக்கவழக்கங்கள் ஆகியவை சரியான நோயறிதலைச் செய்வதற்கு எவ்வாறு முக்கியம் என்பதை உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்தனர்.
நோயாளிக்கு ஏற்பட்ட அறிகுறிகள்
- காய்ச்சல்
- தொண்டை வலி
- சோர்வு
- தலைவலி
- தடிப்புகள்