fbpx

சோக.. சம்பவம்.. குறுக்கே வந்த மாடு.. கால்வாயில் விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு.!

ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27 வயது). இவருக்கும் பாலமுருகன் என்பரின் மகள் சூரிய பிரியதர்ஷினி (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. தற்போது சூரிய பிரியதர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கடந்த 3ம் தேதி கணவண் – மனைவி இருவரும் இரவு நேரத்தில் மோட்டார் பைக்கில் அண்டக்குடி கிராமத்தில் இருந்து அவர்களுடைய வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலையின் குறுக்கே எதிர் பாராத விதமாக மாடு வந்ததால், மோட்டார் பைக் பிரபாகரனின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகே இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து விட்டது.

இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியான பிரியதர்ஷினி தண்ணீருக்குள் விழுந்து, மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பிரபாகரன் பலத்த காயம் அடைந்து மயங்கிய நிலையில் கரையில் கிடந்தார்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பிரபாகரன் எழுந்து பார்த்துள்ள போது, மனைவியையும் மோட்டார் பைக்கையும், காணவில்லை. இதனையடுத்து அங்குள்ளவர்கள் கால்வாய்க்குள் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் தேடிய பிறகு சூரிய பிரியதர்ஷினியை சடலமாக மீட்டெடுத்தனர்.

பிரபாகரன் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிரியதர்ஷினியின் சடலத்தை கைப்பற்றினார். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rupa

Next Post

நடிக்க வந்த மாணவி மீது சீறிப்பாய்ந்த சினிமா தயாரிப்பாளர்..!! ஓட்டலில் வைத்து பலமுறை..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

Mon Nov 7 , 2022
தன்னை தயாரிப்பாளர் எனக்கூறி கொண்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த கல்லூரி மாணவியை சீரழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தயாரிப்பாளர் தன்னை ஏமாற்றி சீரழித்து விட்டதாக, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 2019ஆம் ஆண்டு நான், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு குறித்து சமூக வலைதளத்தில் வெளியான தகவலை பார்த்து, பின் அதில் […]

You May Like