fbpx

அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று காலை 10 மணி முதல்…! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று தஞ்சாவூரில் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் காலை 10 முதல் 1 மணி வரை நேரில் சென்று தீர்வு செய்து கொள்ளலாம். இந்த குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கைபேசி எண் பதிவு மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்ய மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்‌.

English Summary

A public distribution scheme grievance redressal camp will be held from 10 am today.

Vignesh

Next Post

சூப்பர் வாய்ப்பு...! இன்று காலை 10 மணி முதல்... ChatGPT பற்றி தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி...!

Sat Mar 8 , 2025
The “ChatGPT” training for entrepreneurs will be held today from 10 am to 5 pm in Trichy district.

You May Like