fbpx

நோய் எதிர்ப்பு சக்தியை டக்குன்னு அதிகரிக்க, சிம்பிளா ஒரு ஜூஸ் ஷாட்ஸ்.! .!

குளிர்காலத்தில் அடிக்கடி சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எளிமையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு ஒரு ஆரஞ்சு பழம், சிறிது மஞ்சள் சிறிய அளவில் இஞ்சி, பாதி எலுமிச்சை பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலை நீக்கி விட்டு நீக்கிய தோலை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் தோலை நீக்கி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் இஞ்சி மற்றும் மஞ்சளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிக்சஸி ஜாரில் மற்றும் மஞ்சள் தூண்டுதல் ஆரஞ்சு பழம் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இது நன்றாக அரைந்ததும் இந்தக் கலவையுடன் கொதிக்க வைத்த ஆரஞ்சு பழ தோளின் சாறை சேர்க்க வேண்டும்.

இவற்றை வடிகட்டி ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகு பொடி சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கொடுக்கிறது.

Next Post

பெண்களை மனதளவில் பாடாய்படுத்தும் PCOS பிரச்சனை.! அறிகுறிகளும் தீர்வுகளும்.!

Sat Nov 25 , 2023
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது PCOS. இது ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் என்று அழைக்கப்படுகிறது. அதன் சுருக்குமே pcos ஆகும். இது இனப்பெருக்க காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஒருவித ஹார்மோன் பிரச்சனையாகும். இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கான சுழற்சியில் இருக்காது. காரணமில்லாமல் ஏற்படும் பயம், எப்போதும் சோர்வாக இருப்பது, எண்ண ஓட்டம் சமநிலையில்லாமல் இருப்பது போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும். இந்த பிசிஓஎஸ் பிரச்சனை ஆண்ட்ரோஜன் […]

You May Like