2023 அக்டோபர் 2 முதல், அக்டோபர் 31 வரை நடைபெறும் சிறப்பு இயக்கம் 3.0 -ல் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, அதன் பொதுத்துறை நிறுவனங்கள் / இணைக்கப்பட்ட / துணை ஒருங்கிணைப்பு அலுவலகங்கள் பங்கேற்கும். நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் துறையின் கீழ் நடத்தப்படும் இந்த இயக்கம் தூய்மையை நிறுவனமயமாக்குகிறது. அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதற்கான ஆயத்த கட்டம் நேற்று தொடங்குகியது.
தூய்மை இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு பங்களிக்கும் வகையில் 3437 இடங்களில் தூய்மை முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வாரத்திற்கு 03 மணி நேரத்தை தூய்மைப் பணிகளுக்காக அர்ப்பணித்தல், கழிவு மேலாண்மை, தோட்டம் அமைத்தல், வழக்கமான தூய்மை இயக்கங்கள், வெள்ளை அடித்தல், தளவாட நவீனமயமாக்கல் / மேம்படுத்துதல், பழைய கோப்புகளை அகற்றுதல் / ஆய்வு செய்தல், பூச்சிக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு செயல்பாடுகள் தூய்மை இயக்க காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது