தலைநகர் டெல்லியில் இன்று பருவமழை ஆரம்பமாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது இத்தகைய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சாக்ஷி என்பவர் தன்னுடைய உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது.
அந்தப் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து செல்ல முயற்சி செய்தபோது அருகில் இருந்த மின்கம்பத்தை அவர் பிடித்ததாக தெரிகிறது இதனால் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயற்சி செய்த அவரது சகோதரியும் மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்துள்ளார். அருகில் இருந்த ஓட்டுனர்கள் சிலர் சாக்ஷியின் 9 வயது மகன் மற்றும் 7 வயது மகளை காப்பாற்றியுள்ளனர்.
அலட்சியம் காரணமாக, உண்டான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக டிசிபி அபூர்வ குப்தா தெரிவித்திருக்கிறார். இதை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது