fbpx

“தன் மீதே ‘எஃப்ஐஆர்’ பதிவு செய்த ஆசிரியர்.”! தெரு நாயைக் காப்பாற்றும் முயற்சியில் மனைவியின் உயிரைக் குடித்த கோர விபத்து.!

குஜராத் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், நெடுஞ்சாலையில் தன் மனைவியோடு செல்லும் போது, குறுக்கே வந்த தெரு நாயின் மீது காரை மோதாமல் இருக்க, பக்கவாட்டில் உள்ள தடுப்புகளில் மோதினார். அதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகையால் அந்த ஆசிரியர், தன் மீதே காவல் துறையில் புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில், 55 வயது பரேஷ் தோஷி என்ற ஆசிரியர் அவரது மனைவி அமிதாவுடன் வாழ்ந்து வந்தார். கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, அந்த ஆசிரியரும் அவரது மனைவியும் குஜராத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோயிலில் வழிபாட்டை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்பொழுது எங்கிருந்தோ தெரு நாய் ஒன்று குறுக்கே புகுந்தது. அந்த நாயைக் காப்பாற்றும் முயற்சியில், அந்த ஆசிரியர் பக்கவாட்டில் காரைத் திருப்பினார். அப்போது கார் நெடுஞ்சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த தற்காலிக தூண்கள் மற்றும் தடுப்புகளின் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் ‘ஆட்டோ லாக்’ வசதி இயங்க தொடங்கியது.

அதனால் பலத்த காயமடைந்த அமிதாவை சரியான நேரத்திற்கு மீட்க முடியவில்லை. காரின் கண்ணாடியை உடைத்து அமிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் தனது மனைவியை இழந்த அந்த ஆசிரியர், தான் வேகமாக காரை ஒட்டியதாகவும், தன்னுடைய அஜாக்கிரதையினால் தான் இந்த விபத்து நேர்ந்தது என்றும், இந்த விபத்திற்கு தானே பொறுப்பு என்றும் தன் மீதே எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டுமென்று காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Next Post

ஓபிஎஸ் அணிக்கு 3 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி..!! பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டி..?

Tue Feb 6 , 2024
பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு ராஜ்யசபா தொகுதியும் தருவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. என்னதான் அவர் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினாலும், அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட […]

You May Like