fbpx

திருச்செந்தூர் To இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிக சுற்றுலா…! தமிழக அரசு அறிவிப்பு

திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிக சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம், சுற்றுலா சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

மேற்கண்ட சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் திரு செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் சிறப்பு தரிசனம். உலகிலேயே முதலில் தோன்றிய முதல் கோவில் இராமநாதபுரத்தில் அமைந்து இருக்கும் உத்திரகோசமங்கை, மங்களநாதர் கோவிலில் சிறப்பு தரிசனம் . தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு தரிசனம் இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் இதன் சிறப்பு அம்சம் ஆகும். மேலும் இச்சுற்றுலாவில் தனுஷ்கோடியினை சிறப்பு பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்களை (180042531111) (Toll Free). 044-25333333 மற்றும் 044-25333444 தொடர்பு கொண்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

A three-day spiritual tour of Tiruchendur – Rameswaram has been organized by the Tamil Nadu Tourism Development Corporation.

Vignesh

Next Post

”இனி வாட்ஸ் அப் உள்ளிட்ட மின்னணு தளங்களில் சம்மன் அனுப்பக் கூடாது”..!! காவல்துறைக்கு அதிரடி உத்தரவு போட்ட சுப்ரீம் கோர்ட்..!!

Tue Jan 28 , 2025
The Supreme Court has ordered that police should not send summons to appear for questioning through WhatsApp, among other means.

You May Like