fbpx

இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 20,409 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,409 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,313 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,39,79,730 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,33,09,484 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,258 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,03,60,46,307 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,63,960 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

கள்ளக்குறிச்சி வன்முறையில் கைதான 16 வயது சிறுவன் சிறையிலடைப்பு..! பெற்றோர் கோரிக்கையால் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Fri Jul 29 , 2022
கள்ளக்குறிச்சி கலவரத்தில் 16 வயது இளம் சிறார் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக பெற்றோர் தாக்கல் செய்த புகார் மனுவை அடுத்து, இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 300-க்கும் மேற்பட்ட வன்முறை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடலூர் மற்றும் திருச்சி சிறையில் […]
மாணவி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்..! ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்..!

You May Like