fbpx

திமுக கொடிக்கம்பத்தை அகற்றும் போது விபரீதம்.. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!! 4 பேர் படுகாயம்..

திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை அகற்ற கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் கொடிக்கம்ங்களை திமுகவினர் அகற்றி வருகின்றனர்.

கட்சி உத்தரவை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சியில் திமுக கிளைச் செயலாளரார் ராமமூர்த்தி (50) கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுது கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பி மீது சாய்ந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் ராமமூர்த்தி, கூலி தொழிலாளி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பரிசோதித்த மருத்துவர் ராமமூர்த்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (58), பெருமாள் (46), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூபாலன் (50), சர்க்கரை (55) உள்ளிட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ராமமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: இலட்சக்கணக்கான மக்களை பொழுது போக்குக்காக கொன்ற இந்தியாவின் கொடூர அரசன்..!! என்னவெல்லாம் செய்தார் தெரியுமா..?

English Summary

A tragic incident has occurred in Uthankarai where one person was electrocuted while removing the DMK flagpole.

Next Post

’குட் பேட் அக்லி’ படம் எப்படி இருக்கு..? பாக்ஸ் ஆபீஸில் தெறிக்கவிட போகுது..!! சிட்டிசன், மங்காத்தா பாணியில் மாஸ் காட்டிய அஜித்..!!

Mon Mar 24 , 2025
The film 'Good Bad Ugly' is a mix of films like Citizen, Deena, Billa, and Mangatha.

You May Like