உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது மகன் மற்றும் மகள் ஆகியோரை கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இதுவரை ஆறு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது 10 வயது சகோதரன் ஆகியோர் திடீரென காணாமல் போயிருந்தனர் . இதனைத் தொடர்ந்து அவர்களது தந்தை ஷாஹித் பெய்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை அதனைத் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.
காவல்துறையின் விசாரணையில் அந்த குழந்தைகளின் தாயாரே அவரது மகனையும் மகளையும் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொடூரமாக கொலை செய்து கால்வாயில் வீசி எறிந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அந்தக் குழந்தைகளின் கொலைகார தாய் அவரது கள்ளக்காதலன் அண்டை வீட்டுக்காரர் மற்றும் இரு பெண்கள் உட்பட ஆறு பேரை இதுவரை கைது செய்திருக்கிறது காவல்துறை. அந்த சிறுவன் மற்றும் சிறுமியின் உடல் வீசப்பட்டதாக சொல்லப்பட்ட கால்வாயிலிருந்து இதுவரை உடல் மீட்கப்படவில்லை. சிறுவன் மற்றும் சிறுமியின் உடல்களை காவல்துறையினர் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.