அமெரிக்காவைச் சார்ந்த 13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கும் செய்தி உலகை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சார்ந்தவர் ஆண்ட்ரியா சரோனா. இவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். மேலும் அந்தச் சிறுவனை தனது ஆசைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இதன் காரணமாக கர்ப்பம் தரித்த ஆண்ட்ரியாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது தொடர்பாக அந்த 13 வயது சிறுவனின் பெற்றோர் ஆண்ட்ரியாவிற்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆன்ட்ரியா தற்போது சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில் தனது குழந்தையை காரணம் காட்டி சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார் ஆண்ட்ரியா. அவரது வழக்கறிஞரின் அறிவுரைப்படி புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் சிறுவனுடன் உறவு வைத்து கொண்ட குற்றவாளி என்றாலும் பிறந்த குழந்தையின் நலன் கருதி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு புதிய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தச் சிறுவனின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதேபோன்று ஒரு 31 வயது ஆண் ஒரு 13 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கி இருந்தால் அவனுக்கு உங்களால் விலக்கு அளிக்க முடியுமா? என கேள்வி கேட்டிருக்கிறார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆண்ட்ரியாவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆண்ட்ரியாவின் மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.