fbpx

3 முறை கள்ளக்காதலனுடன் ஓட்டம்! கணவனுக்கு கச்சிதமாக ஸ்கெட்ச் போட்ட மனைவி!

கடலூர் மாவட்டத்தில் மனைவியே கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் வயது 34 இவரது மனைவி பெயர் ராதிகா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவிற்கு அப்பகுதியைச் சார்ந்த தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். இரண்டு வருடங்களில் மூன்று முறை ராதிகா தினேஷ் உடன் ஓடி இருக்கிறார். மூன்று முறையும் காவல்துறையினர் தலையிட்டு ராதிகாவை மீட்டு வந்து பாலகிருஷ்ணன் உடன் சமாதானம் பேசி சேர்த்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு சடலமாக கடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி செய்த பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரணை செய்தனர். அவரது மனைவி ராதிகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது காதலுக்கு இடையூறாக இருந்ததால் பாலகிருஷ்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் . இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.

Rupa

Next Post

ஆயுத இறக்குமதி!... சர்வதேச அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா!... புள்ளி விவரங்கள் இதோ!...

Thu Mar 16 , 2023
சர்வதேச அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிக ஆயுதங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் குறித்த அறிக்கையை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் ‘சிப்ரி’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2018-22 காலகட்டத்தில் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், சவுதி […]

You May Like