மேற்குவங்க மாவட்டத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் ஒருவர் கணவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தைச் சார்ந்தவர் உத்தரா இவருக்கும் யூதன் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் உத்தராவிற்கு மகதோ என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது . இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களிருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த சம்பவம் ஜூதனுக்கு தெரியவே அவர் இருவரையும் கண்டித்து இருக்கிறார்.
இதனால் அவர் இருக்கும் வரை நாமிருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுத்த கள்ளக்காதல் ஜோடி உத்தராவின் கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டது. அவர்களது திட்டத்தின் படி உத்தரார் தனது கணவரை ஆளில்லாதவரிடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் ஒலித்திருந்த மகதோ ஜோதனை தாக்கி கொலை செய்துள்ளான். பின்னர் இருவரும் சேர்ந்து உடல் வெளியே தெரியாமல் இருக்க தங்களது வீட்டின் கழிப்பறை அருகே குழி தோண்டி அதில் உப்பு போட்டு ஜூதனின் உடலை புதைத்துள்ளனர். தற்போது காவல்துறையின் விசாரணையில் இந்த சம்பவம் அம்பலமாக இருக்கிறது. தனது தந்தையை காணவில்லை என ஜூதனின் மகன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை உத்தரவிடம் விசாரித்ததில் தனது காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை அவரது தகவலின் பேரில் ஜார்கண்டில் இருந்த அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டார்.