சென்னை மாநகர பகுதியில் உள்ள வியாசர்பாடியில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவர், புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தனக்கு 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார்.
இந்த நிலையில், அதே பகுதியில் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (19)என்ற இளைஞர் தன் மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். இதனிடையே மகளை பலமுறை கண்டித்தும், அறிவுரை கூறியும் அதனை ஏற்காமல் அவருடன் மகள் பழகி வந்தார்.
இதனையடுத்து 2 பேரும் பேசி வந்த நிலையில், என் மகளை ஆசை வார்த்தைகளை கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.இந்த நிலையில், தற்போது எனது மகள் கர்ப்பமாக உள்ளார்.
அத்துடன் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மகளிர் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.