டெல்லியின் உத்தம் நகரில் உள்ள ஓயோ ஹோட்டல் அறையில் 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் உறவினர்கள் துவாரகா மாவட்டத்தில் உள்ள தப்ரி காவல் நிலையத்தில் தங்கள் வீட்டுப் பெண்ணை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியாததால் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் உத்தம நகர் ஹோட்டல் அறை ஒன்றில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தப்ரி காவல் நிலையத்தில் காணாமல் போனதாக வாரளிக்கப்பட்ட பின் தான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்திருக்கிறது. அந்தப் பெண் ஹோட்டல் அறையில் தனியாகத்தான் தங்கியிருக்கிறார். அவரது பெயரில் தான் அறையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இதனால் தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவரது உடலை பார்க்கும்போது தற்கொலைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. இதனால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாரா ?அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என்பது புதிராகவே இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல் துறையின் விசாரணையை பொறுத்து தான் உண்மை தெரியவரும்.