ரேஷன் கார்டு தொடர்பான மத்திய அரசின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு தொடர்பான புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும் இன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக ரேஷன் கார்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது அதார் என்னும் இணைக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால் அந்த உறுப்பினரின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அனைத்து விதமான அடையாள அட்டைகளுடனும் அதார் எண் விரைவில் இணைக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.