fbpx

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்…! உடனே நடவடிக்கை வேண்டும்…! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…!

ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு.

பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால், உண்மை நிலை நேரெதிராக இருக்கிறது. சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொளி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன.

ஆனாலும் அமைச்சர் இன்னும் உண்மையை மறைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார். ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகள், அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, தமிழகம் சார்பாக மாணவர்களைத் தேர்வு செய்யாமல் அவர்கள் எதிர்காலத்தை வீணடித்திருக்கும் திறனற்ற திமுக அரசு, தற்போது, குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது. உடனடியாக, சிறார்களை பணியில் அமர்த்தியவர்கள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரரை மேற்கொண்டு அரசு பணிகளில் இடம்பெறாத வண்ணம், கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

அக்டோபர் 1-ம் தேதி முதல்...இது அனைத்திற்கும் கட்டுப்பாடு...! மத்திய அரசு அதிரடி முடிவு...!

Fri Jun 9 , 2023
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை, சிறப்பாகத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகப் பகுதிகள் உட்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை 01.10.2023 முதல் கடுமையாக பின்பற்றப்படும். இதில் கூறப்பட்டுள்ள […]

You May Like