fbpx

“வசீகரா……”! பாடலை பாடிய பிரபல திரைப்பட பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீர் விபத்து! லண்டனில் அறுவை சிகிச்சை!

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழ் சினிமாவின் முன்னாடியே இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தான் இவர் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். அவரது இசையில் பாடிய பாடல்கள் தான் ஹிட்டாகவும் அமைந்திருக்கின்றன.

திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது மேடை கலை நிகழ்ச்சிகளிலும் பாடி வந்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. இந்நிலையில் லண்டனில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்று இருக்கிறார் இவர். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் அவரது தலையில் அடிபட்டு அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டு வருகிறது.

Baskar

Next Post

பிறந்த சில நிமிடங்களில்.... பச்சிளம் குழந்தையை 4 1/2 லட்சத்துக்கு விலை பேசிய தாய்! சுற்றி வளைத்த காவல்துறை!

Fri Mar 24 , 2023
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த ஆண் குழந்தையை 4 1/2 லட்சம் ரூபாய்க்கு விற்ற வழக்கில் தாய் மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் காவல்துறை கடந்த வியாழக்கிழமை குழந்தை நாலரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட வழக்கில் 11 பேரை கைது செய்தது. காவல்துறையின் தகவலின் படி ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சார்ந்த ஆஷா தேவி என்ற பெண் தனது ஆண் குழந்தை […]

You May Like