fbpx

மழை பாதித்த தொழில் நிறுவனங்களுக்கு குட் நியூஸ்…! காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை…!

பெருமழையால் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடனுதவி வழங்கிடவும், காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார் ‌.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் “மிக்ஜாம்” புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் ஏற்பட்ட பெருமழையால் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடனுதவி வழங்கிடவும், காப்பீட்டு தொகையை விரைந்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்கள்.

அண்மையில் ஏற்பட்ட “மிக்ஜாம்” புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தியிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4800 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரு மழையினால் அதிகமான பாதிப்பிற்குள்ளானது மட்டுமல்லாமல் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது. ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசு மின் விநியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்துள்ளபோதும், இந்நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியை துவங்க சிறிது காலம் தேவைப்படும் என்பதால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றியமைத்திடவும், கூடுதல் மிகைப்பற்று (Over Draft) வசதியினை வழங்கிட வேண்டும்.

மேலும் கூடுதல் நடைமுறை மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை காலதாமதமின்றி உடனடியாக விடுவிக்க அறிவுறுத்தவும், காப்பீட்டு தொகையை செய்து மதிப்பீடு நடிவடிக்கை எடுக்க காப்பீட்டு விரைந்து நிறுவனங்களை அறிவுறுத்திட வேண்டும். இந்த நடவடிக்கைகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உறுதுணையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

புது வருஷம் 2024ல் எச்சரிக்கையா இருக்க வேண்டிய ராசிகள்.! கண்டிப்பா படிங்க.!

Sun Dec 10 , 2023
2024 ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் வர இருக்கிறது. வரப் போகின்ற புது வருடத்தில் கிரகணங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை பொறுத்து ராசிகளுக்கான பலன்களும் மாறுபடும். பிறக்க இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் கேது சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் பல்வேறு ராசிகளில் சஞ்சரிக்க இருக்கிறார்கள். இதனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட கணிப்பாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். வர இருக்கின்ற புத்தாண்டில் […]

You May Like