fbpx

அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்…! கொளுத்தி போட்ட திருச்சி சூர்யா…!

திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? என திருச்சி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவினர் உருவ கேலி செய்த போது பாஜக தலைவர் தமிழிசைக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதனை திமுகவினர் கேலி செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியுடன் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன்.

தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை, அப்படி இருந்தாலும் அது முன்பு இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால் சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் அப்படி பதிவிட்டேன். வருகின்ற 2027 வரை அண்ணாமலை தான் மாநிலத் தலைவராக தொடர்வார். 2026இல் முதலமைச்சர் ஆவார்” என அண்ணாமலைக்கு ஆதரவாக சமிபத்தில் பேசிய இருந்தார் திருச்சி சூர்யா.

இந்த நிலையில் பாஜகவில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அண்ணாமலை குறித்து தமிழிசை சொன்னது உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை..? நாடார் என்பதாலா..?

தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா..? தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

English Summary

Action should be taken on Annamalai.

Vignesh

Next Post

மராட்டிய அரண்மனை முதல் பெரிய ஆலமரம் வரை!. தஞ்சாவூரில் பேய்கள் நிறைந்த இடங்கள்!.

Mon Jun 24 , 2024
Dare To Explore Thanjavur's These Top 5 Haunted Places

You May Like