தனது எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களின் மனதை வென்றவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில், கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், வரும் ஜனவரி 23ஆம் தேதி இவரது விடாமுயற்சி திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி இவரது குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது.
ஒருபக்கம் பிஸியாக நடித்துவரும் நடிகர் அஜித்குமார், துபாயில் நடைபெற்ற கார் ரேஸிலும் தனது டீமோடு கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும், போட்டியில் வெற்ற பெற்ற அவர், ரேஸ் செய்ய என்னை அனுமதித்த ஷாலுவுக்கு நன்றி என்று கூறி பலரின் மனதை கவர்ந்தார். இதனிடையே, இவரது முதல் காதல் ஏன் பிரேக் அப் ஆனது என்பது குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, அஜித்குமார் நடிகை ஹீராவைத்தான் முதலில் காதலித்தார். ஆனால் இவர்களின் காதலுக்கு ஹீராவின் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பழைய பேட்டியில் பேசிய அவர், “எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால் இப்போது அவர் ஒரே நிலையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் போதைக்கு அடிமையாகிவிட்டார்” என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.