fbpx

பரபரப்பு…! முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

இந்த விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத நிலையில், எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இப்பிரச்சினை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசில் உள்ள உயர் அதிகாரிகள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

English Summary

Additional police security at former minister Sengottaiyan’s house

Vignesh

Next Post

இனி ஏடிஎம்-களில் காவலர்களை நியமிக்க தேவையில்லை; இது நடைமுறைக்கு மாறானது!. உச்ச நீதிமன்றம் அதிரடி!

Wed Feb 12 , 2025
No need to appoint guards at ATMs anymore; this is impractical!. Supreme Court takes action!

You May Like