fbpx

தூள்..! வரும் 16-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்… பத்திரப்பதிவு துறை அதிரடி உத்தரவு…!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 16.09.2024 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 16.09.2024 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக வில்லைகளும் பொதுமக்களின் 4 தட்கல் முன்பதிவு பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

English Summary

Additional token in the office of the Registrar on the 16th… Deeds Department action order

Vignesh

Next Post

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு...! தமிழக அரசு அனுமதி...

Sat Sep 14 , 2024
Spiritual Discourse in Charities Controlled Temples

You May Like