சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அந்த நடவடிக்கைகள் யாவும் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதாக தெரியவில்லை.
அந்த வகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் அவரை கொலை வெறியுடன் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். அந்த மர்ம நபர்கள் இருவரும் இரு சக்கர வாகன த்தில் வந்து அவரை கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.
கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.