நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள , சேந்தமங்கலம், வடுகப்பட்டியில் ராமசாமி என்ற விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளை வளா்த்து வருகின்றார்.
இந்த நிலையில் அவர் வளர்த்த ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்று விட்டு பிறகு சில நாள்களில் உடல்நல குறைவால் தாய் ஆடானது இறந்து விட்டது.தாய் ஆடு இறந்ததால் அதன் ஆட்டுக் குட்டிகள் பால் குடிக்க முடியாமல் பசியால் தவித்து வந்துள்ளது.
இந்த நிலையில் மேய்ச்சலுக்காக சென்று விட்டு வரும் பசுவின் மடியை தேடிச் சென்று பாலுக்காக இரண்டு குட்டிகளும் முட்டியுள்ளது. இதனை தாய் பசுவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு பால் வழங்கியுள்ளது.
அதன் பிறகு தினமும் ஆட்டுக் குட்டிகள் இதனையே வழக்கமாக்கிக் கொண்டன.சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் ஆட்டுக் குட்டிகள் பால் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது என ராமசாமி கூறியுள்ளார். பசுவின் இந்த தாயுள்ளம் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.