fbpx

பரபரப்பு…! அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம்…!

அண்ணாமலையின் உருவ பொம்மைகளை அதிமுகவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுக பிட்டிங் ஏஜென்ட் பார்ட்டியாக, டெண்டர் முறை விடும் கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி மாறியுள்ளதாக விமர்சித்த அண்ணாமலை, விவசாயின் மகனான எனது நேர்மை, நாணயத்தை பற்றி எடப்பாடி பழனிச்சாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேச தகுதி இல்லையென காட்டமாக விமர்சித்தார். அதிமுக ஆட்சி காலத்தின் போது மாதம் மாதம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனி சாமி என்னைப்பற்றி பேசக்கூடாது என அண்ணாமலை கூறினார். அண்ணாமலை கூறிய கருத்து அதிமுகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

அதிமுகவை சேர்ந்த பல தலைவர்கள் அண்ணாமலையின் கருத்துக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தஞ்சை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அண்ணாமலையின் உருவ பொம்மைகளை அதிமுகவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் பதட்டமான சூழல் உருவாக்கியுள்ளது.

English Summary

AIADMK protests by burning effigy of Annamalai.

Vignesh

Next Post

Viral Video | என்னா அடி.. நடுரோட்டில் கணவனை வெளுத்து வாங்கிய மனைவி..!! வேடிக்கை பார்த்த போலீஸ்..!!

Mon Aug 26 , 2024
Wife Catches Husband With Another Woman, Drags Him Out and Kicks Hard in Full Public View,

You May Like