fbpx

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் :  நிதி நிறுவன துணை தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்…!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவை அவர் வகித்து வந்த நிதி நிறுவன துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அந்நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் வயதான பெண் இருவரும் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த நிதி நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கு சங்கர் மிஸ்ரா என்ற நபர் மதுபோதையில் அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அந்த விமான நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்தபோதும் பணியில் இருந்த ஏர் இந்தியா பிரச்சினையை சரிசெய்வதிலேயே குறியாக இருந்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அந்த பெண் டெல்லிக்கு வந்த பின் ஆன்லைன் மூலம் தனது புகாரை ஏர் இந்தியா தலைமைக்கு அனுப்பியுள்ளார். ஆனாலும், சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இந்த விஷயம் வெளி உலகிற்கு தெரியவந்த பிறகுதான், சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா 30 நாட்கள் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்தது. சங்கர் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள சங்கர் மிஸ்ரா மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்துகொண்ட சங்கர் மிஸ்ராவை அவர் வேலை செய்து வரும் நிறுவனம் வால்ஸ் பெர்கொ வேலையை விட்டு நீக்கியுள்ளது

Kokila

Next Post

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும் கணவரிடமிருந்து வாழ்நாள் முழுதும் ஜீவனாம்சம் பெறலாம்: அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி...!

Sat Jan 7 , 2023
இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும், மறுமணம் செய்யும் வரை அவர்களுக்கு முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜாஹிதா கட்டூன் என்ற இஸ்லாமிய பெண் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் முடியும் வரை மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு […]

You May Like