fbpx

கேஜிஎஃப் 3 படத்தில் நடிக்கும் அஜித்..!! உண்மை என்ன..? தயாரிப்பு நிறுவனம் சொன்னதை கவனிச்சீங்களா..?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் அஜித். இவர், கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதே போல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோ நடிக்கின்றனர். இப்படம் அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக உள்ள 2 புதிய படங்களில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், கேஜிஎஃப் யுனிவெர்ஸில் உருவாகும் கேஜிஎஃப் 3 படத்திலும் அஜித் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

படத்தின் கதை குறித்து பிரசாந்த் நீலிடம் விவாதித்ததாகவும், கதை பிடித்து போகவே அஜித்தும் அதற்கு ஓகே சொன்னதாகவும் தகவல் கசிந்தது. கேஜிஎஃப் 1, 2, சலார் படங்களை தயாரித்த ஹோம்பேல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், ஹேம்பேல் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளனர். மேலும் இது வெறும் வதந்தி என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இந்த தகவல் போலி செய்தி என்பது தெளிவாகியுள்ளது.

Read More : ”நிலத்தடி நீரை மனிதர்களால் குடிக்கவே முடியாது”..!! ”எதிர்காலத்தில் காத்திருக்கும் பேராபத்து”..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Rumor has it that Homebale, which produced KGF 1, 2 and Salaar, is going to produce this film. However, Hempel has denied this news.

Chella

Next Post

டியூசனுக்கு வந்த மாணவனை மயக்கி உல்லாசம்..!! 15 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..!! விருதுநகரில் அதிர்ச்சி..!!

Fri Jul 26 , 2024
A complaint was filed at the Women's Police Station that the teacher was sexually harassing her son who was going to Tucson

You May Like