fbpx

இவர்கள் அனைவரும் மேற்படிப்பினை தொடர விண்ணப்பிக்கலாம்…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர ஆணையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழிகாட்டுதல்கள்(SOP) வெளியிடப்பட்டுள்ளது. அதில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான விண்ணப்பங்கள், சான்றிதழ் பெற வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள Nodal தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்வி சான்றிதழ்களுடன் ஏதேனும் ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 03.10.2023 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கிறிஸ்த்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sun Sep 17 , 2023
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்த்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பிரி மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல உ உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் […]

You May Like