fbpx

மத்திய அரசு உத்தரவை தொடர்ந்து புதுச்சேரியில் ஆல் பாஸ் முறை ரத்து.. மாணவர்கள் ஷாக்..!! – கல்வி அமைச்சர்

கடந்த 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1 முதல் 8ம் வகுப்புவரை, மாணவர்கள் தோல்வி அடையாமல், கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்தமுறை காரணமாக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இதை கைவிட வேண்டும் என்றும் பல மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன. 

அதனைத்தொடர்ந்து 5 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களின் கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் நேற்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 5 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஃபெயில் ஆக கூடாது. கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்கள் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதிலும் அவர்கள் தோல்வி அடைந்தால் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது. மறுபடியும் அதே வகுப்பை தொடர வேண்டும். தேர்வில் தோல்வியடைந்தாலும், எந்த ஒரு மாணவரும் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அவர் தெளிவு படுத்தினார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆறுமுகம் நமச்சிவாயம், மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அறிவிப்பின்படி, 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் ஆல் பாஸ் முறை புதுச்சேரியில் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்தார். இந்த செய்தி மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read more ; ”பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்”..!! தவெக தலைவர் விஜய் பதிவு..!!

English Summary

All pass system canceled in Puducherry following central government order

Next Post

ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் WhatsApp வேலை செய்யாது..! முழு பட்டியல் இதோ..!

Tue Dec 24 , 2024
Meta has announced that WhatsApp will no longer work on many Android devices running KitKat OS or older versions starting January 1, 2025.

You May Like