பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது. முதல் தவணையாக ரூ.10,000, பிறகு 2, 3ஆவது தவணையாக கடனுதவி அளிக்கப்படும். சாலையோர உணவகம், பழக்கடை, சலவை கடை, முடி திருத்துவோர் உள்ளிட்டோர் ஆதார் மூலம் வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7%. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1,200 கேஸ்பேக் சலுகையும் உண்டு.
வரி திருத்தம்:
தற்போதைய பட்ஜெட் அறிவிப்பின்படி புதிய வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலையான கழிவுத் தொகை ரூ.75 ஆயிரத்தையும் சேர்த்தால் ரூ.12,75,000 வரை ஆண்டு வருமானம் உள்ள மாத ஊதியம் பெறுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது. இப்படி பார்த்தால் மாதம் ரூ.1,06,250 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. அதே நேரத்தில் மாத வருமானத்திலோ, ஆண்டு வருமானத்திலோ மிகச் சிறிய உயர்வு இருந்தால்கூட குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.