fbpx

கேரள மாநிலத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்னதான் நடந்தது……? காவல்துறை விசாரணையில் வெளியான பகிர் உண்மை…..!

கேரளாவின் அலுவா மாவட்டத்தில் சென்ற 4️ வருட காலமாக ஒரு தம்பதிகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் அந்த குழந்தையை தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் புகார் வழங்கினர். இதனை தொடர்ந்து சிறுமியை தேடும் பணிகள் காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் அலுவா சந்தையின் பின்புறத்தில் சந்தேகத்திற்குரிய விதத்தில் ஒரு மூட்டை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்த காவல்துறையினர் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது காணாமல் போன அந்த 5 வயது சிறுமியின் உயிரற்ற உடல் அந்த மூட்டையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கேரள மாநில அலுவா தொகுதி சட்டசபை உறுப்பினர் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் மக்கள் அச்சமின்றி நடமாட முடியும் என்று கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆகவே காவல்துறையினர் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதோடு, கழுத்து நெறிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்ற விவரம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

அத்துடன் அந்த சிறுமியின் பிறப்புறுப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கைது செய்யப்பட்ட ஆசப் ஆலம் என்ற இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக, அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

காலையிலேயே பயங்கர சம்பவம்…..! மதுரை திருமங்கலம் அருகே கண்டெய்னர் லாரியோடு மோதிய கார் 4 பேர் பரிதாப பலி…..!

Mon Jul 31 , 2023
சாலை விதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினரும், அரசியல் கட்சியின் தலைவர்களும் எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் வாகன ஓட்டிகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. விளைவு, நாள்தோறும் பல்வேறு விபத்துக்கள் உயிரிழப்புகள் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் மதுரை- திருமங்கலம்- விருதுநகர் சாலையில் ஒரு கார் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது மையிட்டான் பட்டி விளக்கு என்ற பகுதியில் அந்த வழியே வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரி அந்த […]

You May Like