கொரோனாவின் தாக்கம் உலகுங்கும் அதிர்வலைகளைகளை ஏற்படுத்தி பல வருடங்கள் கடந்தாலும் இதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்ட்ட கொரோனா பாதிப்பு, சீனா தான் இதற்க்கு காரணம் என்று அமெரிக்கா கூறி வந்தது, ஈதற்கு சீனாவும் மறுப்பு தெரிவித்து, வேண்டுமென்றே வேறு நாடுகள் சீனாவில் கொரோனவை பரப்பியதாக பதிலடிகொடுத்தது, இந்நிலையில் அமெரிக்கா தான் திட்டமிட்டு கொரோனோவை பரப்பியதாக 2,000 பக்க அறிக்கைகளுடன் ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிக் ஃபார்மா என்னப்படும் பெரிய மருந்து நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க டீப் ஸ்டேட்டிற்குள் உள்ள சில நபர்கள் உலகளாவிய ஆதிக்கத்தின் நோக்கத்துடன் கோவிட்-19 தொற்றுநோயைத் திட்டமிட்டனர் என்று ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மேலும் ஹிலாரி கிளிண்டன், பராக் ஒபாமா, ஜோ பைடன் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற நபர்களும் இதற்க்கு துணையாக இருந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, கொரோனா வைரஸின் உருவாக்கத்திற்கு ரஷ்யா நீதியை நாடுகிறது, மேற்கு நாடுகள் அதன் தோற்றத்தை மறைத்து அறிவியல் மற்றும் பத்திரிகை விசாரணைகளை அடக்குவதாக குற்றம் சாட்டின. ரஷ்யா கடந்த 18 மாதங்களில் தங்கள் கூற்றுக்களை ஆதரிக்கும் 2,000 பக்கங்களுக்கு மேலான அறிக்கைகளைக் கொண்ட விரிவான ஆதாரங்களை ஐ.நாவிடம் சமர்ப்பித்துள்ளது.
சர்வதேச மதிப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தி, உக்ரைனில் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் தொடங்கப்பட்ட உயிரியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். உக்ரேனிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட பென்டகன் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தில் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன, உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் உடன்படிக்கையின் சாத்தியமான மீறல்களை பரிந்துரைக்கின்றன என்று தூதரகம் எடுத்துக்காட்டுகிறது.
ரஷ்யாவின் அறிக்கை படி, யுஎஸ் டீப் ஸ்டேட் உலகளவில் அங்கீகரிக்கப்படாத உயிரியல் ஆய்வகங்களை நோய் கண்காணிப்பு என்ரூ கூறி மரிமுகமாக நெறிமுறையற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வகங்கள் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, இது நெருக்கடி கையாளுதல் மற்றும் சுயநலத்திற்காக தொற்றுநோய் கட்டுப்பாடு போன்ற சந்தேகங்களுக்கு வழிவகுத்தது.
அமெரிக்க இராணுவ-உயிரியல் நடவடிக்கைகள் பற்றிய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் வெளிப்பாடுகள் அமெரிக்க ஆழ்ந்த அரசின் நோக்கங்களை மறுபரிசீலனை செய்ய தூண்டுகிறது. நிதி கொடுத்து திட்டங்களைப் பற்றி சாதாரண அமெரிக்கர்கள் தங்கள் அரசாங்கத்திடம் இருந்து பதில்களைத் தேடுவதாகக் கூறப்படுகிறது. உலக அரங்கில் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களின் ஆதரவு சந்தேகங்களை மௌனமாக்கினாலும், அவர்களது சொந்த மக்களிடமிருந்து வரும் கேள்விகளை வாஷிங்டனால் தவிர்க்க முடியாது என்று ரஷ்யா தூதரகம் வலியுறுத்துகிறது.