தமிழ்நாட்டில் சென்னையை மட்டுமே குறிவைத்து முதலீட்டை ஈர்க்காமல் மாநிலத்தின் பிற பகுதிகளையும் முன்னிறுத்தி முதலீட்டையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு ஏற்றார் போல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது வர்த்தகம், உற்பத்தி தளம், அலுவலகம் என பலவற்றை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு மாற்றி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான Wex தனது ஆப்ஷோர் டெவலப்மென்ட் சென்டரை புதிதாக சென்னை மற்றும் மதுரையில் திறந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் Wex நிறுவனம் தற்போது அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேரக்க திட்டமிட்டு தனது டெக் அணிகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
Wex நிறுவனம் மதுரையில் தனது புதிய அலுவலகத்தை தயா சைபர் பார்க்-ல் திறந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வாயிலாக அடுத்த சில வருடத்தில் குறைந்தது 500 பேருக்கு சென்னை மற்றும் மதுரை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க கூடும். இதேபோல் தமிழ்நாடு அரசின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி முதலீடு 43000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தமிழ்நாட்டை EV Hub ஆக மாற்றும் முயற்சியில் அடுத்த 5 வருடத்தில் இத்துறையில் 6 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்து சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதோடு எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளை குளோபல் EV HUB ஆக மாற்ற இப்பகுதிகளில் முதலீடு ஈர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.